Header Ads



பதவி விலகல் குறித்த கேள்விக்கு, மத்திய வங்கி ஆளுநரின் அதிரடி பதில்


தனது ஊழியர்களின் சம்பள அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்திற் கொண்டு தான் மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.


மத்திய வங்கியில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


"எனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் மறுபரிசீலனை காரணமாக நான் ராஜினாமா செய்யப்போவதில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

அதில் தௌிவாக உள்ளேன். இந்த பதவியின் ஊடாக நாட்டுக்கு செய்ய வேண்டியதை செய்ய முடியாமல் போனால் மாத்திரமே நான் போவேன்.  நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில், நிறுவன ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் பொறுப்பு எனக்கு உள்ளது. நான் அதை செய்தேன். அதனால் நான் விலகுவதற்கு இதை ஒரு காரணமாக பார்க்கவில்லை. இந்த தீர்மானம் நிதிச் சபையலால் மாத்திரம் எடுக்கப்பட்டது அல்ல. தொழிற்சங்கங்களுடன் பேசி மூன்று ஆண்டுகளுக்கு கூட்டு ஒப்பந்தம் மூலம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது."

No comments

Powered by Blogger.