கோட்டாபயவின் புத்தகம் - ராஜபக்ஷக்கள் என்ன நினைக்கிறார்கள்..?
நேற்று ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் உரையாற்றிய அவர், அப்படியொரு புத்தகம் தன் வீட்டில் இல்லை என்று கூறினார்.
கோத்தபாய தனது புத்தகத்தின் பிரதியைக் கூட, என்னிடம் தரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவின் புத்தகத்தின் டிஜிட்டல் பதிப்பை நீங்கள் படித்தீர்களா என்று தொலைக்காட்சி தொகுப்பாளர் கேட்டதற்கு, அந்த புத்தகத்தின் டிஜிட்டல் பிரதி இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என்று பசில் ராஜபக்ஷ கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பிரிவிடமிருந்து புத்தகத்தின் பிரதி எனக்கு கிடைக்கவில்லை என அவர் கூறினார்.
பின்னர், புத்தகத்தையும் படிக்கும் எண்ணம் இல்லை என்றார்.
“இந்தப் புத்தகத்தின் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. ஆனால், கோட்டாபய ராஜபக்ச ஒரு புத்தகம் எழுதப் போகிறார் என்றும், அதை முழுமைப்படுத்த விவரங்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறார் என்றும் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் தெரிந்து கொண்டேன்” என்று அவர் மேலும் கூறினார்.
நாமல் கூட புத்தக கடையில் இருந்து புத்தகத்தை வாங்கியதாக பசில் ராஜபக்ச கூறினார்.
“கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து புத்தகத்தைப் பெறுவேன் என்று நான் நம்பவில்லை. எங்கள் குடும்பங்களில் தவறான புரிதல்கள் இல்லை, புத்தகத்தை எனக்கு வழங்காததில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
Post a Comment