முதற் தடவையாக அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு அழைப்பு, ஹமாஸ் அழிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிப்பு
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளதாவது,
காசாவில் மக்கள் பட்டினியால் வாடுவதாகவும், பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
காசாவில் போர் தொடங்கி, 150 ஆவது நாட்கள் நெருங்குகையில் அமெரிக்காவிடம் இருந்து இன்றுதான் முதற் தடவையாக இப்படியொரு அழைப்பு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
'ஜனாதிபதி ஜோ பைடனும், நானும் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான எங்கள் உறுதிப்பாட்டில் அசைக்க முடியாதவர்கள்.' என்று அவர் தொடர்ந்தார், ஹமாஸ் அழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
டபல் கேமின் உச்சக்கட்டம்.இதன் வெற்றி இஸ்ரவேலைச் சென்றடைய வேண்டும் என்பது அமெரிக்காவின் இலக்கு.இரட்டை வேடம் கொண்ட உலக அரங்கில் பைடன் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியைத் தழுவிக் கொண்டது போல் இதுவும் இன்ஷா அல்லாஹ் ஹமாஸுக்கு நல்ல பலனைக் கொண்டுவர பிரார்த்தனை செய்வோம்.
ReplyDelete