கத்தாரில் ஹமாஸுடன் சீனா பேச்சு
காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு அவசர உதவி தேவைப்படுவதாகவும், இஸ்ரேலிய இராணுவத்தால் பட்டினி மற்றும் "கொலைகளுக்கு" உள்ளாக்கப்படுவதாகவும் தோஹாவிற்கான சீன தூதர் காவோ சியோலின் அடங்கிய தூதுக்குழுவிடம் ஹனியே கூறியதாக ஹமாஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பு மற்றும் படுகொலைகளை விரைவாக நிறுத்த வேண்டும், ஆக்கிரமிப்பு இராணுவத்தை திரும்பப் பெற வேண்டும், இடம்பெயர்ந்தவர்களைத் திரும்பப் பெற வேண்டும், தங்குமிடம் மற்றும் புனரமைப்புத் தேவைகளை வழங்க வேண்டும்,
மேலும் [கிழக்கு] ஜெருசலேமுடன் முழு இறையாண்மையுடன் ஒரு சுதந்திர பாலஸ்தீனிய அரசை நிறுவுவதற்கான அரசியல் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளை அடைய வேண்டும் என்று அவர் கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
சீன இராஜதந்திரி இதன்போது குறிப்பிடுகையில், சீனா போரை நிறுத்த விரும்புவதாகவும், ஹமாஸை 'பாலஸ்தீனிய தேசிய கட்டமைப்பின் ஒரு பகுதியாக' பார்க்கிறது என்றும், எனவே அரசியல் உறவைப் பேண விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment