Header Ads



அஞ்சல் திணைக்களத்தின் எச்சரிக்கை


அஞ்சல் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி குறுந்தகவலை அனுப்பி இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற குறுஞ்செய்திகளுக்கு மக்கள் தங்கள் ரகசிய தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு அஞ்சல் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.


இலங்கை அஞ்சல்  மூலம் விநியோகிக்கப்படும் பொதிகளுக்கான கட்டணத்தை செலுத்துமாறு பொதுமக்களுக்கு போலியான குறுஞ்செய்தி அனுப்பி கடனட்டை தரவு திருட்டு மோசடி இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.


இலங்கை அஞ்சல், இலங்கை அஞ்சல் திணைக்களம், SL POST, Sri Lanka Post போன்றவற்றின் பெயர்களைப் பயன்படுத்தியும் இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பயன்படுத்தியும் இந்த மோசடி இடம்பெற்று வருகிறது.


இதன்படி, கடனட்டை தொடர்பான தகவல்களை குறுஞ்செய்தி மூலம் விசாரிக்கும் போது அதனை வழங்க வேண்டாம் என்றும், கடனட்டை மூலம் பொதி தொடர்பான எந்தப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளப்படாது எனவும் அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பான மேலதிக தகவல்களைக் அறிய விரும்பினால், அஞ்சல் திணைக்களத்துன் ஹெல்ப்லைன் 1950, தகவல் தொழில்நுட்பப் பிரிவு 011 2542104, 011 2334728, 0112335978, 011 2687229, 011 2330072 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments

Powered by Blogger.