படுவீழ்ச்சியில் டொலர், உயரப் பாய்ந்த ரூபா
8 மாதங்களுக்கு பின்னர் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 300 ரூபாவை விடவும் குறைவாக பதிவாகியுள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 29 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன், விற்பனை விலை 308 ரூபாய் 90 சதமாக பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இறுதியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 300 ரூபாவிற்கும் குறைவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment