நீர்கொழும்பில் விநோதமான போட்டி
- இஸ்மதுல் றஹுமான் -
நீர்கொழும்பு பிரதேச செயலகம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விசித்திரமான போட்டி நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது.
நீர்கொழும்பு பிரசித்திபெற்றுள்ள மீன் வகைகளைக் கொண்டு பெண்கள் மீன் உணவு சமைக்கும் போட்டி இன்று செவ்வாய்கிழமை 12 ம் திகதி பிரதேச செயலக வளவில் இடம் பெற்றது. நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ரசிக்க மல்லவாரச்சி போட்டியாளர்கள் மீன் உணவு சமைப்பதைப் பார்வையிட்ட பின் கருத்துத் தெரிவிக்கையில்,
பண்டைய காலத்தில் பெண்கள் மீன் வகைகளை பயன்படுத்தி பல்வேறு விதமான முறையில் நாவுக்கு ருசியாக மீன் கறிகளை சமைப்பார்கள். அது இன்று மங்கிப்போயுள்ளன. இன்றுள்ள இளம் பெண்களுக்கு இவை தொடர்பாக தெரியாது. கடல் உணவைக்கொண்டு பல்வேறு விதத்தில் பல வகையான மீன் உணவுகளை தயாரிப்பதை ஊக்கப்படுத்துவதற்காக இந்த போட்டியை நாம் ஏற்பாடு செய்தோம். இந்தப் போட்டியில் மீனவ சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 18 பேர் கலந்துகொள்கின்றனர்.
சிறந்த நடுவர் குழுவினால் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவர். இவர்களுக்கான பரிசளிப்பு 20 திகதி நடைபெறும் பிரதான வைபவத்தின் போது வழங்கப்படும் எனக்கு கூறினார்.
Post a Comment