கொரியாவில் பல உயிரிழப்புகளை தடுத்த, மொஹமட் நிபால் -அந்நாட்டில் பணப்பரிசு வழங்கி கௌரவிப்பு
கொரியாவின் உல்சான் நகரில் பணிபுரியும் காலியை வசிப்பிடமாகக் கொண்ட மொஹமட் நிபால் என்ற இளைஞனே இவ்வாறு கௌரவிக்கப்பட்டார்.
கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி கொரியாவின் உல்சானில் உள்ள குளோபல் ஹவுஸின் ஐந்து மாடி ஊழியர் தங்கும் விடுதியின் இரண்டாவது மாடியில் தங்கியிருந்த இந்த இளைஞன், மூன்றாவது மாடியில் புகைமண்டலத்தை பார்த்துள்ளார்.
உடனடியாக நிறுவன அதிகாரிகளுக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்த இளைஞன், இரவு பணிக்கு செல்வதற்கு முன் அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஊழியர்களை எழுப்பி மீட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை, இந்தோனேசியா, உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் குழுவொன்று அங்கு தங்கியுள்ளனர்.
பின்னர் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீ பரவாமல் தடுத்து 30 நிமிடங்களில் தீயை முழுமையாக அணைத்தனர். தீப்பிடித்த பகுதியில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
மொஹமட் நிபால் ஊடகத்திடம் கூறுகையில், கட்டிடம் புகையால் நிரம்பியதைக் கண்டு பயந்தேன், ஆனால் அந்த நேரத்தில் அவர் தனது சக ஊழியர்களின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment