பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை நிறுத்துமாறு அழைப்பு
பாலஸ்தீனிய அதிகாரசபையின் தலைவர், மஹ்மூத் அப்பாஸ் மற்றும் கத்தார் எமிர், ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி ஆகியோர் காசா பகுதியிலும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமிலும் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை நிறுத்துமாறு அழைப்பு விடுத்தனர்.
இரு தலைவர்களும் "காசாவிலிருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் மற்றும் மேற்குக் கரை மற்றும் ஜெருசலேமில் அனைத்து ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும்" என்று வஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புனித ரமழான் மாதத்தில் அல்-அக்ஸா மசூதிக்கு தொழுபவர்களுக்கு தடையின்றி அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். காஸாவிற்கு மேலும் மனிதாபிமான உதவிகள் மற்றும் பாலஸ்தீனியர்கள் மேலும் இடம்பெயர்வதைத் தடுக்கவும் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.
Post a Comment