Header Ads



தெற்காசியாவின் மிகப்பெரும் மகப்பேறு வைத்தியசாலை காலியில் திறக்கப்பட்டது


தெற்காசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலையாக கருதப்படும் காலி, கராப்பிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய ஜேர்மன் - இலங்கை நட்புறவு மகளிர் வைத்தியசாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


இந்த 6 மாடி மருத்துவமனையில் 640 படுக்கைகள், 6 அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகள், தீவிர சிகிச்சை பிரிவுகள், ஆய்வகங்கள், சிறுவர் தீவிர சிகிச்சை பிரிவுகள், சிறப்பு குழந்தைகள் பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் உள்ளன.

No comments

Powered by Blogger.