Header Ads



நீங்கள் செய்யும் பணி, யார் என்பதை காண்பிக்கட்டும்


உலகை ஆண்ட மாமன்னர்களில் ஒருவரான துல் கர்னைன் அவர்கள் ஒரு முறை தனது படை, பரிவாயத்தோடு ஒரு பிரதேசத்தை கடந்து சென்று கொண்டிருந்தார். 


அங்கே பேசவோ, எழுத வாசிக்கவோ தெரியாத மிகவும் பின்தங்கிய பழங்குடியினர்கள், குகைகளிலும் பொந்துகளிலும் வசித்து வந்ததைக் கண்டார். 


வெறுங்காலுடன், நிறுவாணமாக வாழ்ந்து வந்த அவர்களுக்கு ஆடைகள் தைக்கவோ, வயல்களில் பயிர் சொய்யவோ, வீடுகள் கட்டவோ எதுவும் தெரிந்திருக்கவில்லை. 


உடனடியாக, மன்னர் துல் கர்னைன் அந்த ஆதிவாசிகளை ஒன்று சேர்த்தார். 


அவர்களுக்கு பேச, எழுத, வாசிக்க,  ஆடைகள் தைக்க, விவசாயம் செய்ய, வீடுகள் கட்ட, அணைகள் கட்டி தண்ணீர் சேகரிக்க கற்றுக்கொடுக்கும் படி கட்டளையிட்டார். 


அப்போது மன்னருடன் இருந்த மார்க்க போதகர்களில் ஒருவர், 'நாம் இவர்களுக்கு சேவை செய்ய முன்னர், இவர்களை ஏக தெய்வ விசுவாசத்தின் பால் அழைப்பு விடுப்போமே, இல்லாவிட்டால் நம் செய்யும் சேவைகள் யாவும் வீணாகிப் போகுமே!' என மன்னரிடம் ஆலோசனை கேட்டார். 


அதற்கு அலெக்சாண்டர் துல் கர்னைன் அவர்கள், அந்த போதகரின் பக்கம் திரும்பி, 'முதலில் நாம் அவர்களின் உடலை மறைப்போம், பசியை போக்குவோம், நாகரிகத்தை கற்றுக்கொடுப்போம். பின்னர் இது பற்றி பார்ப்போம்" என்றார். 


அப்படியே மன்னரும் தனது பரிவாரத்தோடு சில காலம் அந்தப் பிரதேசத்தில் தங்கியிருந்தார். அக்கால கட்டத்துக்குள் அவர்கள் பேச, எழுத வாசிக்க, மற்றும் பல  தொழில் முறைகளையும் கற்றுக் கொண்டனர். பின்தங்கிய சமூகமாக இருந்த அவர்கள் நாகரீகமான சமூகமாக மாறிவிட்டனர். 


பிறகு மன்னர் துல் கர்னைன் அவர்கள் தன் படைக்கும் பரிவாரத்துக்கும் புறப்பட்ட தயாரகும் படி கட்டளையிட்டார். உடனே அந்தப் பிரதேச மக்கள் ஓடி வந்து மன்னரிடம்; நீங்கள் பின்பற்றும் மார்க்கம் பற்றியும் வணங்கி வழிபடும் கடவுளைப் பற்றி எங்களுக்கு சொல்லித் தாருங்கள் என்று வேண்டிக் கொண்டனர். 


அப்போது மன்னர் துல் கர்னைன் அவர்கள்,  அந்த மக்களுக்கு ஏக தெய் விசுவாசம் பற்றி விளக்கிக் கூறினார், சன்மார்க்கத்தின் விழுமியங்களை எடுத்து இயம்பினார். அவர் பேசி முடிக்க முன்னர் அங்கிருந்த அனைவரும் ஏக இறைவனை கடவுளாக ஏற்றுக்கொண்டனர். 


இந்த நேரத்தில் தான் மன்னர் துல் கர்னைன் அவர்கள், அந்த போதகர் பக்கம் திரும்பி "நீங்கள் செய்யும் பணி நீங்கள் யார் என்பதை காட்டட்டும்!" என்ற வாசகத்தை மொழிந்தார். 


✍ தமிழாக்கம் /  imran farook

No comments

Powered by Blogger.