இலங்கையில் இப்படியும் ஒரு வைத்தியர்
வைத்தியர் ஒருவர் உள்ளிட்ட பணிக்குழாமினர் நோயாளர்களின் வீடுகளுக்கு சென்று மருத்துவம் வழங்கும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பதுளை நகரத்திலிருந்து சுமார் 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கெந்தகொல்ல பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் உள்ளிட்ட பணிக்குழாமினரே இவ்வாறு மக்களுக்கு சேவை செய்கின்றனர்.
குறித்த வைத்தியர்கள் உள்ளிட்ட பணிக்குழாமினர் இவ்வாறு சுமார் 50 நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து அந்த வைத்தியசாலையின், பிரதம வைத்திய அதிகாரி சசித் பண்டார தெரிவிக்கையில்,
''கடந்த வருடத்தில் வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் தொற்றா நோய் கிளினிக்குகளை மேற்கொள்ளும் போது நான் கண்டது என்னவென்றால், பெரும்பாலான முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களினால் ஒரே இடத்தில் இருப்பவர்களால் எமது வைத்தியசாலைகளுக்கு வரமுடியவில்லை.
அதாவது போக்குவரத்து சிரமங்கள், மலைகளில் இருக்கிறார்கள், கடினமான வீதிகளில் உள்ளவர்கள் இருக்கிறார்கள், பொருளாதார பிரச்சினைகளால் முடியாதவர்களும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போதைய பொருளாதார சிக்கல்களை கருத்தில் கொண்டு நோயாளிகள் எங்கள் மருத்துவமனைக்குச் வருவதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதற்கு பரிகாரமாக நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் வீடுகளுக்குச் சென்று சிகிச்சையை வழங்கி அவர்களின் உடலநலத்தை முன்னேற்ற முயற்சித்து வருகிறோம்.
பணிக்குழாமினரும் இதற்கு பெரும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர். இந்த வேலையைச் செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
இந்த நடவடிக்கை அந்த நோயாளிகளுக்கு சிறப்பான சேவையை வழங்க முன்னெடுக்கப்பட்டுள்ளது.''என கூறியுள்ளார்.
Post a Comment