Header Ads



யா அல்லாஹ்....

 
அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்!


எங்களை படைத்து பாதுகாத்து வரும்  எங்களின் இரட்சகனே!


நூஹ் நபி கூக்குரலிட்டு அழைத்த போது அவருக்கு பதிலளித்த அல்லாஹ்வே!


நோயுற்றிருந்த நிலையில் உன்னை அழைத்த அய்யூப் நபியின் நோயைக்குணப்படுத்தியவனே!


குழந்தைப் பேறுக்காக ஜகரிய்யா நபி அழைத்த போது  மலடான  அவர் மனைவிக்கும் குழந்தை பாக்கியத்தை வழங்கிய கருணையாளனே!


எங்களின் தாழ்ந்த நிலை உன் முன்னால் இருக்கிறது.


எங்களின் தேவை என்னவென்று உனக்குத்தெரியும்.


 எங்களின் நல்லமல்களோ மிகக்குறைவு.


 ஆனால் உன்னிடம் நாங்கள் எதிர்பார்ப்பதோ மிக அதிகம்.


எங்களின் தகுதிக்கேற்ப உனது அருளை வழங்காமல் மகத்தான உன்னுடைய  அருட்கொடையின் அளவிற்கேற்ப எங்களின் மீது உனது கருணையைப் பொழிவாயாக!


யா அல்லாஹ்! உன்னுடைய அருளைப் பெறும்பொழுது உனக்கு நன்றி சொல்பவர்களாக எங்களை ஆக்குவாயாக!


 உன் சோதனை வரும் பொழுது பொறுமையுடையவர்களாக ஆக்குவாயாக 


 எங்களின் அனைத்து காரியங்களிலும் உன்னை நினைப்பவர்களாக ஆக்குவாயாக!


எங்களின் தேவைகளை நிறைவேற்றி அருள்புரிவாயாக!


இம்மாத முழுவதும் சிறிய பெரிய பாவங்கள் செய்யாமல் நல்லமல்கள் புரிந்து ரமழானின் பரக்கத்துகளை முழுமையாக அடையச் செய்வாயாக 


🤲ஆமீன் 🤲

No comments

Powered by Blogger.