Header Ads



உடலை பட்டினி போடும் போது, என்ன நடக்கிறது...?


படத்தில் இருப்பவர் ஜப்பானிய உடலியல் மூலக்கூறு உயிரியலாளர் யோஷினோரி ஓசுமி என்பவர். 2016 ஆம் ஆண்டில், அவர் உடலியல் மூலக்கூறில் "الإلتهام الذاتي" Auto phagy" உடல் தன்னையே உண்ணுதல் பற்றிய மருத்துவ ஆய்வுக்காக நோபல் பரிசை வென்றார்.


அதாவது உடல் 8 மணி நேரத்திற்கு குறையாமலும் 16 மணி நேரத்திற்கு கூடாமலும் பசியுடன் இருக்கும்போது, அது தன்னைத்தானே உண்ணுகிறது, அல்லது உடல் செல்கள் தன்னைத்தானே உண்டு புதுப்பித்துக் கொள்கிறது என்ற மருத்துவ உண்மையை கண்டு பிடித்தார். 


மேலும் இந்த செயல்முறை பற்றி ஓசுமி கூறும் போது, உடல் பட்டினியாக இருக்கும் போது, உடலின் அனைத்து திசுக்களில் இருந்தும் விசேட புரதங்கள் சுரந்து, அவைகள் பெரும் துடைப்பங்கள் போன்று சுற்றித் திரிந்து, உடலில் காணப்படும் இறந்த செல்கள், புற்றுநோய் செல்கள் மற்றும் சிதைவுற்ற செல்களை மறுசுழற்சி செய்து, புதுப்பித்துவிடுகின்றன. 


இப்போதும் கூட மேற்கத்திய நாடுகளில் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளை வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது உண்ணாமல் குடிக்காமல் பட்டினிக்கு உட்படுத்தி "பட்டினி சிகிச்சை" அளித்து வருகின்றனர். 


2016 ஆம் ஆண்டு மருத்துவத்துக்காக நோபல் பரிசின் கருப்பொருளும்  இதுவாகவே இருந்தது. 


நோன்பு பற்றி வான் மறை வசனம் ஒன்று பின்வருமாறு கூறுகிறது:


((நீங்கள் நோன்பு நோற்பதானது உங்களுக்கே நன்மையானதாகும். ))

No comments

Powered by Blogger.