ரமழானில் தொழுவிக்க காத்திருக்கும் ஹாபிழ்களின் கவனத்திற்கு..
- Dr Ahamed Nihaj -
குர்ஆனின் மாதமான ரமழானில் தொழுவிக்க காத்திருக்கும் மதிப்புக்குரிய ஹாபிழ்களின் கவனத்திற்கு,
உங்களுக்கு மிக வசீகரமான குரலும், குர்ஆனை சுமக்கும் பாக்கியமும் கிடைத்திருக்கிறது. இது என்னைப் போல் கன பேருக்கு கிடைக்காத, கிடைக்காதா என ஏங்குகின்ற பாக்கியம்.
எங்களை விட, இந்த குர்ஆனோடு நீங்கள் அதிக தொடர்பை கொண்டிருக்கிறீர்கள். என்றாலும் சில விடயங்களை ஞாபகமூட்ட நினைக்கிறேன்.
குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தைகள். கருத்து தெரியாவிட்டாலும், ஓத வேண்டிய முறையைப் பேணி ஓதினால், உள்ளங்களைத் திறக்கும்.
குறிப்பிட்ட ரக்ஆத்களில் ஒரு ஜுஸ்உவை முடிக்க வேண்டும், குறிப்பிட்ட நேரத்திற்குள் தொழுகையை முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில், பின்னால் நிற்பவருக்கு ஓதுவது என்ன தெரியவா போகிறது என்ற நினைப்பில், அல்லாஹ்வுக்காக அவசர அவசரமாக, நிறுத்த வேண்டிய இடங்களிலும் நிறுத்தாமல் எக்ஸ்பிரசில் ஓதாதீர்கள். இவ்வாறு அவசரமாக ஓதுவது, பின்னால் நிற்கும் எங்களுக்கும் அல்லாஹ்வின் கலாத்திற்கும் செய்யும் அநியாயமாகும். நோன்பாளிகளின் இதயம் பண்பட்ட நேரத்தில், உங்களது ஓதல்கள் உள்ளங்களை உலுக்குபவையாக அமையட்டும்.
Post a Comment