Header Ads



பதிவு செய்யப்படாத மதஸ்தலங்களை சுற்றிவளைக்குமாறு உத்தரவு


பதிவு செய்யப்படாத மதஸ்தலங்களை சுற்றிவளைத்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு கடிதம் அனுப்புமாறு புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


நாட்டின் சமயப் பதிவாளர்களுடன் புத்தசாசன அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


பதிவு செய்யப்படாத மதஸ்தலங்கள் மூலம் மக்களை மதமாற்றம் செய்வதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


சமய விகாரைகள் மற்றும் பிக்குகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பிக்குகளுக்கும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிற்கும் இடையில் நீண்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.


மேலும் அதன்போது, கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையில் துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளின் பெயர்களை உள்ளிடும்போது, ​​துறவிகளுக்கு வெனரபிள் என்றும், கன்னியாஸ்திரிகளுக்கு ரெவரெண்ட் என்றும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

1 comment:

  1. தலைவலிக்கு தலையணை மாற்றும் முயற்சி, உலக மட்டத்திலும் தேசிய மட்டங்களிலும் தைரியமாக முன்னெடுக்கப்படுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.