Header Ads



சவூதிக்கான இலங்கைத் தூதுவராக, மூத்த அரச சேவை அதிகாரி அமீர் அஜ்வத் நியமனம்


சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவராக,  மூத்த அரச சேவை அதிகாரியான அமீர் அஜ்வத் நியமிக்கப்படவுள்ளார்.


இந்த நியமனத்திற்கு பாராளுமன்றத்தின் உயர் பதவிகளுக்கான குழுவினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


வெளிவிவகார அமைச்சின் சிபாரிசுடனான இந்த நியமனம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்படவுள்ளது.


இதற்கு முன்னர் ஓமானிற்கான இலங்கைத் தூதுவராகவும், சிங்கபூரிற்கான இலங்கையின் பதில் உயர் ஸ்தானகராகவும் இவர் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இலங்கை வெளிநாட்டு சேவையில் 1998ஆம் ஆண்டு இணைந்த இவரது முதலாவது வெளிநாட்டு பதவியினை றியாதிலுள்ள இலங்கை தூதுவராலயத்தில் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


இதற்கு மேதிகமாக சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராலயம் மற்றும் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான தூதுவராலயம் போன்றவற்றிலும் இவர் கடமையாற்றியுள்ளார்.


தற்போது சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவராக செயற்படும் பீ.எம். அம்சாவின் பதவிக் காலம் விரைவில் நிறைவடையவுள்ளநிலையில் அந்த வெற்றிடத்திற்கே  மூத்த அரச அதிகாரியான அமீர் அஜ்வத் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.