ஈஸ்டர் தாக்குதலை யார் மேற்கொண்டது என்பது, எனக்குத் தெரியும் – மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டியில் இன்று -22- அது தொடர்பில் தௌிவுபடுத்தினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது என்பது தனக்குத் தெரியும் எனவும், கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் பயங்கரவாதிகள் தொடர்பிலான விடயம் சரியானது எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
தன்னால் கைது செய்யப்பட்டவர்களே நீதிபதிகள் குழாத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையாகவே யார் செய்தார் என்பதனை எவரும் இன்னும் கூறவில்லை என தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்துக் கூறுமாறு நீதிமன்றம் தன்னிடம் கோரிக்கை விடுத்தால், அல்லது உத்தரவு பிறப்பித்தால், யார் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டார்கள் என்பதனை கூறுவதற்கு தான் தயாராகவுள்ளதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும், அதனை மிகவும் இரகசியமாக பேணுவது நீதிபதிகளின் பொறுப்பு எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஆம் உமக்கு நிச்சியம் தெரியும். அந்த இரகசியத்தை இந்த நாட்டிலுள்ள பெரும்பாலான மக்களும் அறிந்து வைத்திருப்பார்கள். அதே நேரத்தில் அந்த அநியாயத்தின் அட்டூழியத்தின் முக்கிய சூத்திரதாரிகளுள் நீரும் ஒருவர் என்பதை இந்த நாட்டு வரலாறு ஏற்கனவே பதிவு செய்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் உமக்கு விதிக்கப்பட்ட அந்த நட்டஈட்டுத் தொகை நூறு கோடியை பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செலுத்தாமல் உயர் நீதிமன்றத்துக்கு கொகா காட்டும் உமது நடத்தையையும் உயர் நீதிமன்றமும் இந்த நாட்டு மக்களும் நிதானமாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது. இந்த பொருப்பிலிருந்து அவரையும் இவரையும் குற்றஞ்சாட்டுவதன் மூலம் உமக்கு ஒரு போதும் விடுதலையாகித் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதையும் பொதுமக்கள் சார்பாக கூறிவைக்க விரும்புகின்றோம்.
ReplyDelete