ரஷ்யாவுடன் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரிட்ட இலங்கையர் பலி
ரஷ்ய இராணுவத்தில் இணைந்து உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்ட இலங்கையர் கொல்லப்பட்டுள்ளதாக அல்ஜசீரா செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர் இலங்கை இராணுவத்தில் இருந்து விலகி ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்துள்ளார். நிபுன சில்வாவுக்கு பத்து வருட இராணுவ அனுபவம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது நெருங்கிய சகாவாக இருந்த சேனக பண்டார என்ற நபர் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த செய்தி வெளியாகி உள்ளது.
ரஷ்ய பதுங்கு குழிகளுக்கான பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த போது உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
அதன்படி, உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக உயிரிழந்த இரண்டாவது இலங்கையர் இவராகும்.
நிபுன சில்வா மாதாந்தம் 3000 டொலருக்கு ரஷ்ய இராணுவத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார். அவர் ரஷ்யாவில் குடியுரிமையும் பெற்றுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment