காசா குழந்தைகளின் கண்களில் எவ்வளவு துன்பங்களை காண்கிறோம், அவர்கள் புன்னகைக்க மறந்துவிட்டார்கள்
காஸாவில் உடனடி போர் நிறுத்தம் மற்றும் அமைதியை மையமாகக் கொண்ட உரையில் காஸாவில் சிறைபிடிக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்குமாறு ஈஸ்டர் தினத்தன்று போப் பிரான்சிஸ் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
"காசாவிற்கு மனிதாபிமான உதவிக்கான அணுகல் உறுதி செய்யப்பட வேண்டும் என்று நான் மீண்டும் முறையிடுகிறேன், மேலும் கடந்த அக்டோபர் 7 அன்று கைப்பற்றப்பட்ட பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்கவும், உடனடி போர்நிறுத்தத்திற்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறேன்," என்று அவர் கூறினார்.
“குழந்தைகளின் கண்களில் நாம் எவ்வளவு துன்பங்களை காண்கிறோம், அந்த போர்க்களங்களில் குழந்தைகள் புன்னகைக்க மறந்துவிட்டார்கள். அவர்களின் கண்களால், குழந்தைகள் எங்களிடம் கேட்கிறார்கள்: ஏன்? எதற்கு இந்த மரணம்? ஏன் இந்த அழிவு? போர் எப்போதும் ஒரு அபத்தம் மற்றும் தோல்வியே”, என்று போப் பிரான்சிஸ் மேலும் கூறினார்.
Post a Comment