Header Ads



சவூதியினால் வழங்கப்பட்ட பேரீத்தம்பழம், பள்ளிவாசல்களுக்கு வினியோகம்


நாட்டிலுள்ள பள்ளிவாசல்களுக்கு சவூதி அரசினால் வழங்கப்பட்ட பேரீத்தம் பழம் அமைச்சரினால்  வினியோகம் ஆரம்பிக்கப்பட்டது.


 சவூதி அரேபியாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பேரீச்சம் பழங்கள் புத்தசாசன அமைச்சில் நேற்று (11.03.2024) புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் இலங்கையிலுள்ள பள்ளிவாசல்களுக்கு விநியோகம் செய்யும் நிகழ்வு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.


  இவ் ஆரம்ப நிகழ்வை கொழும்பு மாவட்டத்திலுள்ள மூன்று பள்ளிவாசல்களுக்கு அன்பளிப்பு செய்து அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.


 நாட்டில் பதிவு செய்யப்பட்ட  பள்ளிவாசல்களுக்கும்  இருபது கிலோ கிராம் பேரீச்சம்பழம் வீதம் வழங்குவதற்கு முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று முதல் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள பள்ளிவாசல்களுக்கு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


 இந்நிகழ்வில் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைசல் மற்றும் திணைக்கள அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. ​வெறுமனே வசதி குறைந்தவர்களுக்கு பகிரப்படும் நோக்கில்இனாமாக வழங்கப்பட்ட இந்த பேரீத்தம் பழத்தை வைத்துக் கொண்டு அரசியல் இலாபம் தேட முயற்சி செய்கின்றனர் இந்த நாட்டிலுள்ள வங்கரோத்து அரசியல் வாதிகள். கேவலத்துக்கு மேல் கேவலம்.

    ReplyDelete

Powered by Blogger.