அல்குர்ஆனில் கூறப்பட்ட (இடி மின்னல் கிழங்கு)
- Imran Farook -
இது நீங்கள் நினைப்பது போன்று உருளைக்கிழங்கோ, கருணைக்கிழங்கோ அல்ல. இது மண்ணில் பயிரிடப்படும் கிழங்கே அல்ல, பயிரிட விதைகளோ, வேர்களோ தண்டுகளோ இருந்தால் தானே! இது விண்ணில் உற்பத்தியாகும் (இடி மின்னல் கிழங்கு - truffle) எனப்படும் ஒரு வகை பாலைவன காளானாகும்.
மின்னல் தீப்பொறி காரணமாக வளிமண்டலத்தில் ஏற்படும் நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் இணைவின் போது, தரையில் ஒரு அமினோ கலவையாக இது உருவாகிறது. வேகமான சுழற்சியின் காரணமாக மண்ணிலுள்ள உப்புகள் மற்றும் தாதுக்களை சேகரித்துக் கொண்டு உருண்டைவடிவமாக இரண்டு சென்டிமீட்டருக்கு அப்பால் மண்ணில் புதைந்து காணப்படும்.
மஞ்சல் தங்கம் என்று அழைக்கப்படும் இது, பல்வேறு ஆரோக்கிய குணங்கள் கொண்டதாகவும் இறைச்சிக்கு சமமான ஒரு உணவாகும் அரபியர்களிடம் பார்க்கப்படுகிறது.
இது அல்குர்ஆனில் கூறப்பட்ட (அல்-மன் المن) என்ற ஆகார வகை சேர்ந்தது என்றும் இதன் சாறு கண்ணுக்கு அருமருந்தாகும்" என்றும் ஒரு நபி மொழியில் பதிவாகியுள்ளது.
Post a Comment