டொலர் வீழ்கிற போதிலும், இலங்கையர்கள் பயனடைய முடியாத துயரம்
இலாபத்தை இலக்கு வைத்து அவர்கள் விற்பனை நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.
இதற்கமைய இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 5.6 சதவீதத்தால் வலுப்பெற்றுள்ளது.
தற்போது நாட்டின் வணிக வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 305 ரூபா 64 சதமாக பதிவாகியுள்ள நிலையில், அதன் கொள்முதல் விலை 300 ரூபா 60 சதமாகவும் மற்றும் விற்பனை விலை 310 ரூபா 20 சதமாகவும் காணப்படுகிறது.
அதன்படி கடந்த 2023ஆம் ஆண்டு அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 12.1 சதவீதமாகவும், இந்த வருடத்தின் மூன்று மாதங்களில் ரூபாயின் பெறுமதி 5.6 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
எனினும் ரூபாவின் பெறுமதி அதிகரிப்பின் பயனை தம்மால் அனுபவிக்க முடியவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மக்கள் கூறுகையில், கடந்த காலங்களில் அதிகரிக்கப்பட்ட அளவுகளில் தற்போது பொருட்களின் விலைகள் குறைகின்றதா என பார்த்தால் அது சந்தேகமே. பாதணிகள் கூட ஆயிரம் ரூபாவிற்கு கொள்வனவு செய்த காலம் உள்ளது.
எனினும் தற்போது அது 3500 ரூபாவாக மாறியுள்ளது. எமது சம்பளத்துடன் இந்த விலைகளை ஒப்பிட்டு பார்க்கும் போது மாதாந்தம் வாழ்க்கையை நடத்திச் செல்வது கடினமாக உள்ளது.
மக்கள் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு ஓடுவது இதனால் தான் என குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment