Header Ads



"நான் ஒரு போதும் மார்க்கத்தை விற்று, அத்திப்பழம் வாங்க மாட்டேன்."


பக்குவத்துக்கும் பற்றற்ற வாழ்வுக்கு பெயர் போன மாலிக் பின் தினார் அவர்கள் 'தாபீஈன்கள்" எனப்படும் இஸ்லாத்தின் இரண்டாம் தலைமுறையினர்களில் ஒருவராகவும், பிரபல மார்க்க மேதைகளில் ஒருவரகாவும் இருந்தார். 


ஒரு முறை அவர் பஸ்ரா நகர சந்தையில் சென்றுகொண்டிருந்த போது அத்திப்பழம் விற்பனை செய்யும் கடையை கண்டதும், அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என  ஆசைப்பட்டார். ஆனால் அவரிடம் கையில் பணம் ஏதும் இருக்க வில்லை. 


கடைக்காரனிடம் சென்று; நான் பிறகு பணம் தருகிறேன், அத்திப்பழம் தர முடியுமா?" என கேட்டார். அதற்கு கடைக்காரர் மறுத்துவிட்டார். "சரி, எனது பாதணியை உங்களிடம் அடகாக வைக்கிறேன், தர முடியுமா?" என கேட்டார். "இல்லை, முடியாது! உங்கள் பாதணி எதற்கும் பெறுமதி இல்லை." என கடைக்காரர் மறுத்துவிட்டார். 


மாலிக் பின் தீனார், அந்த இடத்திலிருந்து சென்ற பின்னர் அங்கிருந்த சிலர்; "இவர்தான் பிரபல மார்க மேதை மாலிக் பின் தீனார்" என கடைக்காரரிடம் சொன்னார்கள். 


உடனே அந்த கடைக்காரர், ஒரு சிறுவனை அனுப்பி, பணம் தேவையில்லை. இலவசமாக அத்திப்பழத்தை எடுத்துக் கொள்ளும் படி அனுப்பி வைத்தார். 


அதற்கு மாலிக் பின் தீனார் அவர்கள்: " நான் மார்க்க மேதை என்பதற்காக இலவசமாக அத்திப்பழம் எனக்கு வேண்டாம். நான் ஒரு போதும் மார்க்கத்தை விற்று அத்திப்பழம் வாங்க மாட்டேன்." என்று எடுக்க மறுத்துவிட்டார். 


📖 நுஸ்ஹதுன் பீ ரியாழில் முத்தகீன் 

✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.