தனது மனைவியை மீண்டும், இலங்கைக்கு அழைத்துத் தருமாறு கணவர் வேண்டுகோள்
குவைத்தில் சித்திரவதை செய்யப்பட்டு தனிமையில் விடப்பட்ட தனது மனைவியை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு மனம்பிட்டிய பகுதியை சேர்ந்த ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனம்பிட்டிய, மஹாவெவ பிரதேசத்தினை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான செவ்வந்தி மஹேஷிகா ஜயவீர என்பவரே குவைத்தில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்ப பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு நிரந்தர வீடு கட்டி, மூன்று குழந்தைகளுக்கு முறையான கல்வியை வழங்கும் நோக்கத்தில், மூன்று மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண் குவைத்தில் வீட்டு வேலைக்காக சென்றுள்ளார்.
குறித்த பெண்ணின் குழந்தைகளை அவரது தாயார் பார்த்துக்கொண்டுள்ளதுடன், கணவன் இரும்பு வாளி உற்பத்தியை பகுதி நேர வேலையாக செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பெண் பணிபுரியும் வீட்டில் பலவிதமான சித்ரவதைகளை எதிர்நோக்கி வருவதனால், அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு பொறுப்பான அதிகாரிகளிடம் அவரது கணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தத் துறையில் எனக்கு இருக்கும் பல வருட அனுபவங்களை வைத்து அனைவருக்கும் தெரிவிப்பது என்ன வெனில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலைகளுக்காக செல்லும் இலங்கைப் பணிப் பெண்கள் முறையிடும் சித்திரவதை, கொடுமை, உணவு கொடுக்காமை போன்ற குற்றச்சாட்டுக்கள் நூற்றுக்கு நூறு பொய். இட்டுக்கட்டப்பட்டவை. அடுத்தபக்கம் பணிவழங்குனர்கள் நூற்றுக்கு நூறு நல்லவர்கள் என்பது இதன் பொருளல்ல. குறிப்பாக இந்தப் பெண்களின் நடத்தை, மொழியறிவின்மை, தவறுதலான புரிதல்களால் தான் பெரும்பாலான குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. பெரும்பாலான பெண்களின் தவறான நடத்தை, அக்கம் பக்கத்திலுள்ள ஆண்களுடன் முறையற்ற உறவுகள் காரணமாக பெரும்பாலான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால் அவை அனைத்தையும் மறைத்து தொழில்வழங்குவருடைய நடத்தையைக் குற்றம் சாட்டு தான் நிரபராதி என காட்டும் தந்திரங்கள் பெரும்பாலான அல்லது அனைத்து பெண்களிடமும் காணப்படுவது வௌிப்படும் போது பல பிரச்சினைகள் உருவாகின்றன. ஆனால் ஒவ்வொரு பெண்ணும் ஒழுக்கமாகவும், நன்னடத்தையுடனும் அர்ப்பணிப்புக்களுடம் பணியாற்றும் போது அவர் அங்கு பல நன்மைகளைப் பெற்றுக் கொள்வதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கின்றோம்.
ReplyDelete