பதவி விலகினார் அனுரகுமார
வசந்த யாப்பா பண்டார மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோர் இன்று உறுப்புரிமையிலிருந்து இராஜினாமா செய்த நிலையில், புதிய தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோப் குழுவின் 30 பேரில் இருந்து இதுவரை 10 பேர் விலகியுள்ளனர்.
அதேநேரம் முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் பாராளுமன்றத்திற்கு தெரிவான காமினி வலேபொட, பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் , ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன, ஹேஷா விதானகே மற்றும் எஸ். எம்.மரிக்கார், பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோரும் கோப் குழுவில் இருந்து விலகினர்.
கோப் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமைக்கப்பட்டமையை அடுத்து இவ்வாறு அதன் உறுப்பினர்கள் பதவி விலகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment