Header Ads



பொதுஜன பெரமுனவில் பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் எவரும் இல்லை


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் (SLPP) பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் இல்லை என்று கூறியுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இன்னும் ஐந்து அல்லது பத்து வருட காலத்திற்குப் பின்னரே ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச போட்டியிட முடியும் என்று கூறினார்.


முதலில் ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என்றும் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுத்த ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் எவராலும் ஸ்திரமான அரசாங்கத்தை அமைக்க முடியாது, பாகிஸ்தானில் இடம்பெற்றது போன்று நாட்டில் நிலைமை ஏற்படும் என்பதால் முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக அமைச்சர் ரணதுங்க கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


“நாட்டின் நலனுக்காக நாம் முடிவுகளை எடுக்க வேண்டும், நாடு முதன்மையானது, கட்சி இரண்டாவது, பாராளுமன்றத் தேர்தல் மற்றும் நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கு SLPP ரணில் விக்கிரமசிங்கவுக்காக ஒத்துழைக்க வேண்டும், அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் அரசாங்கத்தை அமைக்க அனுமதிக்க வேண்டும், வேறு எவரேனும் வெற்றி பெற்றால், அவர் அரசாங்கத்தை அமைக்க அனுமதிக்க வேண்டும் ” என்றார்.

No comments

Powered by Blogger.