Header Ads



நழுவியது அமெரிக்கா - காசாவில் உடனடி போர் நிறுத்த தீர்மானத்தை நிறைவேற்றிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்


காசாவில் "உடனடியாக போர் நிறுத்தத்தை" அமல்படுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில். இதில் அமெரிக்கா தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து மாறி இந்தமுறை நடவடிக்கையை வீட்டோ செய்யாமல் தவிர்த்துவிட்டது.


இந்த தீர்மானத்தின் படி அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.


இஸ்ரேல் - பாலத்தீனம் இடையே அக்டோபரில் போர் தொடங்கியதில் இருந்து போர் நிறுத்த தீர்மானத்தை கொண்டு வர முடியாமல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு சில முட்டுக்கட்டைகள் இருந்தன.


இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பாக, அதற்கும் அதன் நட்பு நாடான இஸ்ரேலுக்கும் இடையே வளர்ந்து வரும் கருத்து வேறுபாட்டைக் குறிப்பதாக அமைந்துள்ளது.


இந்த தீர்மானத்தின் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பினர்களில் அமெரிக்கா தவிர மற்ற நாடுகள் வாக்களிக்க, அமெரிக்கா மட்டும் வாக்களிக்காமல் ஒதுங்கி நின்றது.


இதற்கு முன்னதாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானங்களை ஆதரிக்க முடியாது என்று முன்னர் அவற்றை தடுத்தது அமெரிக்கா.BBC

No comments

Powered by Blogger.