Header Ads



இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி


நாம் இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்களை பெற்று அவற்றிற்கு எமது தொழிலாளர்கள் அனுப்புகிறோம். ஆனால் தற்பெருமைக்கார சிவப்பு சகோதரர்கள்(ஜேவிபி) எம்மை விமர்சித்து பலவேறு பொய்யான குற்றச்சட்டுக்களை எம்மீது முன்வைக்கிறார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


அவர்கள் இளைஞர்களை மீண்டும் புதைகுழிக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் என கவலை வெளியிட்டுள்ளார்.


ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் ஏழாவது கட்டத்தின் இரண்டாம் நாள்  நிகழ்வு இன்று மாத்தளை எட்வர்ட் மைதானத்தில் நடைபெற்றது.


இங்கு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.


தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், இளைஞர் சமுதாயம் சவால்களுக்கு முகம்கொத்து மகிழ்வாக வாழ்த்து வாழ்க்கையை வெற்றிகொள்ள வேண்டும். நாட்டின் வளர்ச்சிப் போராட்டத்தில் மாத்தளை இளைஞர்களும் பங்களித்துள்ளார்கள்.


1956 ல் அரசியல் நலன்களுக்காக தாய் மொழி சிங்கள மாற்றத்தால் ஆங்கிலத்தையும் இழந்தோம். 


நாம் கொரியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் வேலைவாய்ப்புக்களை பெறுகிறோம். அங்கு காணப்படும் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக இளைஞர்களுக்கு இலங்கை சுற்றுலா சபையினால் ஹோட்டல் துறையில் தொழிற்பயிற்சிகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.


அதற்காக மூன்று இலட்சம் ரூபாய் ஜனாதிபதி நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.


தொழில் அனுபவமுள்ளவர்களுக்கு நான் RPL முறையில் அவர்களின் அறிவு திறன் போன்றவற்றை பரீட்சித்து சான்றிதழ்கள் வழங்க ஸ்மார்ட் யூத் கிளப் மூலம் பணத்தை வழங்குகின்றோம்.


இஸ்ரேலில் விவசாயம், ஹோட்டல், நிர்மாணத்துறையில் வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக கூறியும் அமைச்சரின் பெயர் பட்டியலில் முன்னிலைப்படுத்தி அவசரமாக வெளிநாட்டுக்கு அனுப்புவதாக சொல்லி இளைஞர்களிடம் பண மோசடியில் ஈடுபடும் குழுவும் உள்ளது.


எனவே அவ்வாறான இடைத்தரகர்களிடம் ஏமாந்து பணத்தை இழக்க வேண்டாம். 

No comments

Powered by Blogger.