Header Ads



ரணிலின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்கமாட்டோம், எமக்கு எந்தவித சவாலும் இல்லை.


தேர்தலை இலக்காக் கொண்ட ஜனாதிபதியின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குள் எதிர்க்கட்சி சிக்கிக் கொள்ளாது நாளைய கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச் செயலாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு.


புதிய கூட்டத்தொடர் ஆரம்பித்தன் பிற்பாடு கோப் குழுவின் தவிசாளர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்காது ஆளும் தரப்பில் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான நபர் நியமிக்கப்பட்டுள்ளார்.


தூய அரசாட்சியை முன்கொண்டு செல்ல விரும்பமில்லாத நிலைப்பாட்டையே ஜனாதிபதியும் அரசாங்கமும் தொடர்ந்தும் காண்பித்து வருகின்றன.


மக்களின் கோபப்படுத்தும் செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றனர்.


இந்த செயற்பாடுகளுக்கு ஆளும் தரப்பு மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டும்.


சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல்களில் பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரை சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் பல சுற்றுக்களில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சஜித் பிரேமதாச தமது நிலைப்பாட்டை சர்வதேச நாயணய பிரதிநிதிகளிடமும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்திலும் தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.


மீண்டும் புதிதாக ஜனாதிபதிக்கு முன்னால் இருந்து கொண்டு எமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டிய எந்த தேவையும் எமக்கில்லை.


சத்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட உடன்படிக்கைகளை வெளிப்படுத்தவில்லலை.உரிய நேரத்திற்கு நாடவில்லை.சேமலாப நிதியங்கள் உழைக்கும் மக்களின் வைப்புத் தொகைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக உடன்படாடுகளை எட்டியுள்ளனர்.


எந்த வித கலந்துரையாடலும் இன்றி,இலாபமீட்டும் அரச நிறுவனங்களை தமது நண்பர்களுக்கு விற்கும் போக்கால்  உழியர்கே் கோபமடைந்துள்ளனர்.


சகல எதிர்ப்புகளையும் சமநிலைப்படுத்தவே எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


தேசிய ஆடையை அணிந்து கொண்டு போக வேண்டிய தேவையில்லை என்று அன்று கூறிய இராஜாங்க அமைச்சர் இன்று கோட் அணிந்து கொண்டு அழைப்பு விடுக்கிறார்.


சகல வரப்பிரசாதங்களை அநுபவித்துக் கொண்டு மக்களை கஷ்டப்படுத்தி வருகின்றனர்.


ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு காணப்பட்ட உடன்படிக்கையை திருத்தியமைப்போம்.


தேர்தலை இலக்காக் கொண்ட ஜனாதிபதியின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குள் எதிர்ககட்சி சிக்கிக் கொள்ளாது.


ஐக்கிய தேசியக் கட்சியும் ரணிலும் எமக்கு எந்த வித சவாலும் இல்லை.

No comments

Powered by Blogger.