Header Ads



"மக்கள் போராட்டத்தின் எதிரொலி" என்ற நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு


நாரஹேன்பிட்டி அபயாராமாதிபதியும் மேல்மாகாண பிரதம சங்கநாயக்க தேரரும்  கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரால் எழுதப்பட்ட “மக்கள் போராட்டத்தின் எதிரொலிகள்” (ஜனஅரகலயே தோங்காரய) எனும் நூல் இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.  


இதற்கு முன்னர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர், 'இடைவிடாத போராட்டத்தின் உண்மைக் கதை', 'சிங்கள மருத்துவத்தின் மறைவு', 'நைடிங்கேள் குணாதிசயம்', 'ஜெனிவா நெருக்கடியின் எதிரொலிகள்', 'ரன் ஹிய' மற்றும் 'இருளுக்கு வெளியே' ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.


கெடமான்னே குணானந்த தேரர், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்நூல் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

14.03.2024

No comments

Powered by Blogger.