பேஸ்புக்கில் விளம்பரம் செய்து, பெண்களை ஏமாற்றிய போலி வைத்தியர் சிக்கினார்
மாடலிங் துறையில் இணைத்துக்கொள்ளப்படுவர் என முகப்புத்தகத்தில் விளம்பரம் செய்து இளம் யுவதிகளை ஹோட்டலுக்கு அழைத்த கண்டி ரஜவெல்லையைச் சேர்ந்த போலி வைத்தியர் கைது செய்யப்பட்டார்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யுவதிகள் 15 பேர், இரகசிய பொலிஸுக்கு செய்த முறைப்பாட்டு அமையவே போலி வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேஸ்புக்கில் விளம்பரம் செய்த சந்தேகநபர், மாடலிங் துறையில் யுவதிகளை இணைத்துக்கொள்வதாக, அவர்களின் புகைப்படங்களை பெற்று வீடியோவும் எடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட யுவதிகளை தனித்தனியாக நேர்முகத் தேர்வுக்கு அழைத்துள்ளார்.
வைத்தியர் போல தன்னை இனங்காட்டிக்கொண்ட சந்தேகநபர், யுவதிகளின் நிர்வாண புகைப்படங்களை பெற்று அவர்களை அச்சுறுத்தி, பல்வேறான துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
Post a Comment