Header Ads



யாழ்ப்பாண பல்கலைக்கழக முஸ்லிம் மருத்துவ மாணவர்களின் பொதுக்கூட்டமும், இப்தார் நிகழ்வும்



(அஸ்ஹர் இப்றாஹிம்)


யாழ்ப்பாண பல்கலைக்கழக முஸ்லிம் மருத்துவ மாணவர்களின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டமும் வருடாந்த இப்தார் நிகழ்வும் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக அஷ்ஷெய்க் எம்.ஏ பைஸர் காசிமி மதனி  மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களான டொக்டர். ஹனான் டொக்டர். அஷ்ரப் ஆகியோர் கலந்துகொண்டனர். 


அத்துடன்  யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் தலைவர் அல்ஹாபில் ஸல்மானுல் ஹக், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சமூக சேவையாளர்களும் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வானது யாழ் மருத்துவ கல்லூரியின் 42வது அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.






No comments

Powered by Blogger.