Header Ads



"அல்லாஹ் எனக்குக் கொடுத்த மறுவாழ்வு“


இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்த மும்தாஜ், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் கூறுகையில், 


“ நீச்சல் உடையில் நடித்துக் கொண்டிருந்த  நான் இன்று எனது மத மார்க்கத்தில் முழுவதுமாக திரும்பி விட்டேன். எல்லோருக்கும் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் ஒரு திருப்பம் வரும். அதுபோல் தான் எனக்கும். எனது 25 வயதிற்கு மேல் என்னுடைய உடல் நிலை சரியில்லாத காரணத்தால் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்து விட்டேன்.


அந்த நேரத்தில் தான் அல்லாவை முழுமையாக உணர்ந்தேன். திருக்குரானை பின்பற்றத் தொடங்கினேன். அதனை முழுமையாகப் படித்து இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றத் தொடங்கினேன். 


இது அல்லாஹ் எனக்குக் கொடுத்த மறுவாழ்வு“ என்று அந்தப் பேட்டியில் உருக்கமாகப் பேசியிருக்கிறார் மும்தாஜ்.


மும்தாஜின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மும்தாஜின் இந்த மாற்றத்தை பலரும் வரவேற்று பாராட்டி வருகிறார்கள்.

No comments

Powered by Blogger.