Header Ads



“நிக்காஹ்’ பயான்களை செவிமடுக்க, பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும்


(ஏ.ஆர்.ஏ.பரீல்)


நாட்டில் அண்­மைக்­கா­ல­மாக அதி­க­ரித்து வரும் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து உட்­பட ஏனைய விவா­க­ரத்­துகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­ட­லொன்று கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பில் இடம்­பெற்­றது.


கொழும்பு சிலிடா (SLIDA) கல்வி நிறு­வ­னத்தில் இடம்­பெற்ற குறிப்­பிட்ட கலந்­து­ரை­யா­டலை சிலிடா கல்வி நிறு­வ­னத்தின் கல்வி ஆலோ­சகர் அப்துல் ரஸாக் ஏற்­பாடு செய்­தி­ருந்தார்.


கலந்­து­ரை­யா­டலில் நாட்டில் அதி­க­ரித்துவரும் விவா­க­ரத்­து­களை எவ்­வாறு குறைக்க முடியும் என்­பது பற்­றியும் திரு­மண பந்­தத்தில் இணை­ய­வுள்ள தம்­ப­தி­க­ளுக்கு விவா­கத்­துக்கு முன்பு விவாகம் தொடர்­பான விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சி­களை நடாத்­து­வது பற்­றியும் கருத்­துகள் பரி­மா­றப்­பட்­டன.


பாட­சாலை மட்­டத்­திலும், பள்­ளி­வா­சல்கள் உட்­பட மத நிலை­யங்­க­ளிலும் இவ்­வா­றான விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சி­களை நடாத்தத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக அப்துல் ரஸாக் தெரி­வித்தார்.


பள்­ளி­வா­சல்­களில் நிக்காஹ் பயான்கள் இடம்­பெறும்போது அந்­நி­கழ்­வுக்கு பெண்­களும் அழைக்­கப்­பட வேண்டும் எனவும் ஆலோ­சனை முன்­வைக்­கப்­பட்­டது. ‘வொலி’யின் சம்­ம­த­மின்றி விவாகம் செய்து கொள்­வ­தற்­காக வீட்டை விட்டு வெளி­யேறிச் செல்லும் முஸ்லிம் பெண்கள் ‘வொலி’ அனு­ம­திப்­பத்­திரம் பெற்றுக் கொள்­வ­தற்­காக காதி­நீ­தி­மன்­றங்­களை நாடும்­போது அவர்­க­ளுக்கும் திரு­மண வாழ்க்கை தொடர்­பான கவுன்­சலிங் வழங்­கப்­பட வேண்டும் என்றும் ஆலோ­சனை முன்­வைக்­கப்­பட்­ட­தாக பாணந்­துறை முஸ்லிம் விவாக பதி­வாளர் குவாமி பாரூக் தெரி­வித்தார்.


நாட்டில் விவா­க­ரத்­து­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத் திட்­ட­மொன்­றினைத் தயா­ரித்து அர­சாங்கம் மற்றும் ஏனைய நிறு­வ­னங்­களின் அனு­ச­ர­ணை­யுடன் நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ள­தா­கவும் அப்துல் ரஸாக் தெரி­வித்தார்.


குறிப்­பிட்ட கலந்­து­ரை­யா­டலில் அகில இலங்கை விவாகம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்களின் சங்கத்தின் தலைவர் துஷ்மன்த கருணாநாயக்க உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் மற்றும் பொது விவாக பதிவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். – Vidivelli


2 comments:

  1. இலங்கையில் போதிக்கப்படும் இஸ்லாமிய மார்கமானது ஆண்களுக்கு மட்டும் தான்.பெண்களுக்கு பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதிப்பது இல்லை.காரணம் அங்கு பின்பற்றும் இஸ்லாம் முஹம்மது நபி கட்பித்ததுக்கு எதிரானது

    ReplyDelete
  2. காலத்தின் தேவை இப்போது நிறைவேறி உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.