Header Ads



குறைந்த கட்டணத்தில் கொழும்பு - டாக்கா நேரடி விமான சேவை


ஏப்ரல் மாத்தத்தில் கொழும்பு மற்றும் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிற்கு இடையில்  நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைவதாக குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கும் ஃபிட்ஸ் ஏர்  நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்த விமான சேவை ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆரம்ப கட்டணமாக 74 ஆயிரத்து 600 ரூபாவாக அறவிடவுள்ளது.


தற்போது ஃபிட்ஸ் ஏர் கொழும்பில் இருந்து டுபாய், மாலி மற்றும் சென்னைக்கு நேரடி சேவைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.