எறும்புகளின் குடியிருப்புகள், அசத்தலான கட்டிடக் கலைஞர்கள், சான்றிதழ்கள் இல்லாத இன்ஜினியர்கள்
எறும்புகள் அவைகளின் அறைகளை வடிவமைக்கும் போது நீளமாக இல்லாமல் எதிர் வளைவுகள் வடிவிலே கட்டுகின்றன.
அதனால் ஒரு அறை இடிந்து விழுந்தால் கூட, அது கீழே உள்ள மற்ற அறை மீது சரிந்து விழாது. இதன் மூலம் மேலுள்ள அறைகளை தாங்கும் சக்தியை கீழுள்ள அறைகள் பெற ஏதுவாகின்றன.
எறும்புகள் தங்கள் வீடுகளின் நுழைவாயில்களை அமைக்கும் போது, சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் நுழைய ஏதுவாக பிரித்துக் கட்டுகின்றன. மேலும் அவைகளில் இளம் வயதுடைய எறும்புகள் கீழ் அறைகளிலும், முட்டைகள் இடும் எறும்புகள் ராணி அறைக்கு அருகிலும் வசிக்கும். மேலும் மூத்த எறும்புகளும், நீண்ட அனுபவமுள்ள பலமான எறும்புகளும் பாதுகாப்பு நிமித்தம் மேல் தரைக்கு அருகிலுள்ள அறைகளில் காவலாளிகளாக வசிக்கும். சூடு குளிர், மற்றும் மிதமான காலநிலைக்கு ஏற்ப உணவு, தானிய களஞ்சியங்களை அவைஙள் உருவாக்கும் வல்லமை கொண்டது.
(( உறுதியாக நம்புவோருக்கு மண்ணில் பல சான்றுகள் உள்ளன.))
📖 அல்குர்ஆன் : 51:20
Post a Comment