கொழும்புக்கு வந்துள்ள ரஷ்ய ஏவுகணை கப்பல்
கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினரால் கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
“இன்று, பசிபிக் கடற்படையின் முதன்மையான, கார்ட்ஸ் ஆர்டர் ஆஃப் நக்கிமோவ் ஏவுகணை கப்பல் வர்யாக் இலங்கையின் மிகப்பெரிய துறைமுகமான கொழும்பில் வணிக அழைப்பை மேற்கொண்டுள்ளது” என கடற்படையின் பத்திரிகை அலுவலகம் இன்று ரிவித்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
187 மீ நீளமுள்ள இந்த கப்பல் 529 பேர் கொண்ட ஏவுகணை கப்பலாகும். கப்பலின் கொடி அதிகாரி கெப்டன் 1
ஆவது தரவரிசை வெலிச்கோ அனடோலி வாசிசீவிச் மற்றும் கெப்டன் 2 ஆவது தரவரிசை குளுஷாகோவ் ரோமன் நிகோலாவிச் கட்டளை அதிகாரியாக பணியாற்றுகிறார்.
இதேவேளை, கப்பலின் கொடி அதிகாரி மற்றும் கட்டளை அதிகாரி ஆகியோர் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவை சந்திக்க உள்ளனர்.
இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் பணியாளர்கள், நட்புறவை மேம்படுத்தும் நோக்கில், நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களை பார்வையிடும் நோக்கில், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு துறைமுகத்தில் தங்கியிருக்கும் போது, ரஷ்ய கடற்படை கப்பல் நீர் மற்றும் எரிபொருள் விநியோகங்களை நிரப்பும்.
கப்பல் வரவேற்பு விழாவில் இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரக ஊழியர்கள், அந்நாட்டின் கடற்படை அதிகாரிகள் மற்றும் துறைமுக சேவைகளின் பணியாளர்கள் கலந்துகொண்டதாக ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய போர்க்கப்பல் மார்ச் 4 வரை கொழும்பு துறைமுகத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment