இப்படித்தான் நம் நாட்டு அரசாங்கங்கள்
இப்படித்தான் ஒரு முறை, பிஃர்அவுனிடம் ஒரு மூதாட்டி வந்து, இறந்து போன தனது செல்ல ஆட்டை உயிர்ப்பித்துத் தரும் படி வேண்டினாள். பிஃர்அவுன் தன்னை அழிக்கும் கடவுள் என்றும் ஆக்கும் கடவுள் என்றும் வாதடி வந்தது தெரிந்த விடயம்.
நல்ல வேளை அந்த நேரம் பார்த்து பிஃர்அவுன் சபையில் இருக்கவில்லை. உடனே சுதாரித்துக் கொண்ட ஹாமான், அந்த பாட்டியின் செத்த ஆட்டுக்குப் பதிலாக ஒரு புதிய ஆட்டைக் கொடுத்துவிட்டு, ஏதோ காதில் ஓதி, சமாளித்து அனுப்பிவிட்டான்.
பிஃர்அவுன் வந்ததும் ஹாமான் பாட்டியின் ஆட்டுக் கதையை எடுத்துக் கூறினான். உடனே பிர்அவுன் பயந்து போனான். அதை அவதானித்த ஹாமான் பயப்படாதீர்கள்! தலைவா! நான் அந்த பாட்டியிடம்:
இப்போது பிஃர்அவுனை சந்திக்க முடியாது, அவர் ஒட்டகங்கள் படைப்பதில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.' என்று சொல்லி அனுப்பிவிட்டேன்' என்றான்.
இது கேட்டு பெருமூச்சு விட்ட பிஃர்அவுன், ஹாமானே! ஒட்டகம் படைப்பது எவ்வளவு கஷ்டமான காரியம் தெரியுமா! என சொல்லிச் சிரித்தான்.
இப்படித்தான் நம் நாட்டு அரசாங்கங்கள் மக்களை வஞ்சித்து காலத்தை ஓட்டுகின்றன.
✍ தமிழாக்கம் / Imran Farook
Post a Comment