Header Ads



"என்னால் சரியான முறையில், பயணிக்க முடியாமல் போனது"

 
உச்ச  நீதிமன்ற  தீர்ப்பின்  பிரகாரம்  அகில  இலங்கை  மக்கள்  காங்கிரஸ்   கட்சியின்  பாராளுமன்ற  உறுப்பினராக  தொடர்ந்து   செயற்படுவேன்  என,  அம்பாறை  மாவட்ட  நாடாளுமன்ற  உறுப்பினர்  எஸ்.எஸ்.எம். முஷாரப் தெரிவித்தார்.


அட்டாளைச்சேனையில் வெள்ளிக்கிழமை இரவு (01)    நடைபெற்ற ஊடகவிலாளர் மாநாட்டின்  போதே அவர்  மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார் . அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,


" பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து இயங்க முடியுமென உச்ச நீதிமன்றத்தினால் வியாழக்கிழமை (29) எனக்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சட்டத்திற்கு முரணாக எடுத்த முடிவினால் இந்த வழக்கு எனக்கு ஒரு பெரும் சவாலாக இருந்தது. தற்போது நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. இத் தீர்ப்பானது நாட்டின் சட்டவாச்சி மற்றும் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது என்பதை பார்க்கின்றேன்.


இந்த திர்ப்புக்காக கடந்த ஒரு வருடமாக கார்த்திருந்தேன்,இதற்கு இடைப்பட்ட காலப் பகுதியில் என்னால் சரியான முறையில் பயணிக்க முடியாமல் போனது மட்டுமல்லாது பெரும் மன உழைச்சலுக்கும் உட்பட்டிருந்தேன்.


நான் தேர்தல் காலங்களில் நேர்மையான முறையில் எனது பிரசாரங்களை முன்கொண்டு சென்றதனால் மக்கள் எனக்கு ஆணை வழங்கியிருந்தார்கள. எனது அரசியல் காலத்திற்குள் ஊழல் அற்ற அரசியலை மக்கள் முன் கொண்டு சென்றுள்ளேன்.


எதிர்காலத்தில் இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் மீள் பரிசீலனை செய்ய முடியும். எனது பிரதேசத்திற்கு மாத்திரமின்றி முழு அம்பாறை மாவட்டத்திற்கும் என்னால் முடிந்த பணிகளை நேர்மையாக முன்னெடுத்துள்ளேன்" என  குறிப்பிட்டுள்ளார் .


எம்.எஸ்.எம்.ஹனீபா

No comments

Powered by Blogger.