உலக இஸ்லாமிய அமைப்பு - அலி சப்ரி சந்திப்பு, பேசப்பட்டது என்ன..?
உலக இஸ்லாமிய அமைப்பின், பொதுச் செயலாளர் ஹிஸாம் பிராஹீம் தாஹாவை இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்தித்துள்ளார்.
57 நாடுகளை உள்ளடக்கிய உலக இஸ்லாமிய அமைப்பானது, இலங்கை இடையேயான வலுவான உறவை மேலும் வலுப்படுத்துவதை அவர் உறுதிப்படுத்தியதாக அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய விவகாரங்களில், கொள்கை ரீதியான நிலைப்பாடுகளுக்கு, குறிப்பாக நீண்ட கால பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் மோதலில் இரு நாடுகளின் தீர்வுக்கான, உறுதியான ஆதரவு மற்றும் அர்ப்பணிப்புக்காக இலங்கைக்கு அவர் நன்றி தெரிவித்ததாக அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.
உலகில் கையாலாகாத ஒரு நிறுவனம் இருக்கும் என்றால் அதுதான் ஓஐஸீ. வயிற்றுப் பசியைப் போக்க இரவு பகலாக வரிசையில் நின்ற அப்பாவி குழந்தைகள் , பிள்ளைகள் பொதுமக்களை விரட்டி விரட்டி இஸ்ரவேல் கொலை செய்யும் போது இந்த 2000 கோடி அல்லது 2 பில்லியனைக் கொண்டவாய்மூடி கைகட்டி 57 முஸ்லிம் நாடுகளும் உலகில் இருப்பதே முழு உலகுக்கும் அவமானம்,இழிவு, கேவலம். இதற்கு மேல் என்ன கேவலம் இருக்கின்றது? ஷீயாக்களைக் கொண்ட அந்த ஈரான் இன்று இல்லையென்றால் உலகில் உள்ள 2000 கோடி மக்களையும் கொன்றொழிக்க இஸ்ரவேல் முயற்சி செய்தாலும் அதில் ஆச்சரியமில்லை. சுருங்கக்கூறின் அந்த ஈரான் காரணமாகத்தான் ஹமாஸும் ஏனைய அமைப்புகளும் கடந்த 149 நாட்களாக வெற்றிகரமாக இஸ்ரவேலை எதிர்த்துப் போராடுகின்றன. அந்த போராட்ட உணர்வை மழுக்க வைக்கத்தான் அமெரிக்கா இரட்டை வேடம் பூண்டு பல சூழ்ச்சிகளை முன்னெடுக்கின்றது. '' நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.'' காபிர்களுக்கு எதிரான அல்லாஹ்வின் சூழ்ச்சி நிச்சியம் வெற்றி பெறும் என்ற உறுதியான நம்பிக்கையில் நாம் வாழுகின்றோம்.
ReplyDelete