Header Ads



ஒரு முஸ்லிம் பாடசாலையின் அவலம் - பாராளுமன்றத்தில் கூறிய எதிர்க்கட்சித் தலைவர்


38 வருடங்களாக கணிதப் பாட ஆசிரியர் இல்லாத பாடசாலை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சபையில் கருத்து.


மாத்தளை தம்புள்ளை தேர்தல் தொகுதியில் உள்ள தேவஹுவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு 38 வருடங்களாக கணித ஆசிரியர் ஒருவர் இல்லை. 


அவ்வாறே, புத்தல கோனகங்ஆர கனிஷ்ட வித்தியாலயத்திற்கு தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் எவரும் இல்லை. பிரபஞ்சம் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக அண்மையில் மேற்குறிப்பிட்ட குறித்த பாடசாலைகளுக்குச் சென்ற போதே இவை அனைத்தும் அம்பலமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


எமது நாட்டில் 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு 22000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆற்றிய சேவையினைப் பாராட்டி, முறையான வழிமுறையில் அவர்களை ஆசிரியர் துறையில் இணைத்துக் கொள்ளுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று கோரிக்கை விடுத்தார்.

No comments

Powered by Blogger.