அமெரிக்காவின் மீது அச்சத்தில் கோட்டாபய...?
இந்த நூல் தென்னிலங்கை அரசியலில் பேசுபொருளாக உள்ளதுடன், சில உண்மைகள் நூலில் மறைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கோட்டாபய பதவியில் இருந்து அகற்றும் சதித்திட்டத்தை அவரின் அருகில் இருந்த நெருங்கிய நண்பர்களே மேற்கொண்டதாக கடந்தகாலத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இவ் விடயம் குறித்து சிங்கள ஊடக ஒன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க,
அமெரிக்கா மீதான அச்சத்தால் சில விடயங்களை கோட்டாபய, இந்த நூலில் மறைத்துள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,
கோட்டாபய ராஜபக்ஷவை அமெரிக்கா இயக்குவதாக அவர் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை.
சவேந்திர சில்வா, கமால் குணரத்ன உட்பட அவரது நெருங்கிய நண்பர்கள் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கின்றனர் என்பதையும் அவர் அறியாது நம்பிக்கையுடன் செயல்பட்டிருந்தார்.
இவர்கள் மீது கோட்டாபய இன்னமும் அச்சத்திலேயே உள்ளார். அவர் அமெரிக்கா மீதும் பயத்தில் இருக்கிறார். அதனால் புத்தகத்தில் பல உண்மைகளை குறிப்பிடவில்லை.” எனவும் உதயங் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment