Header Ads



69 இலட்சம் வாக்குகளைப்பெற்ற ஆட்சியாளனை ஒரு கல்லைக்கூட கையில் எடுக்காமல் விரட்டியடித்த மக்களே தற்போது இருக்கிறார்கள்


தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, கொழும்பு மாவட்ட மகளிர் மாநாடு – ஹோமாகமையில் – 10.03.2024)


இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் ஓர் அரசியல் மாற்றத்திற்கான கட்டம்  மலர்ந்துள்ளது.  அதனால் ஆளுங் குழுவினர் பொதுத் தேர்தலை நடாத்துவதா ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதா என்ற தடுமாற்றத்தில் இருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலை நடாத்தவே நினைக்கிறார். பொதுத் தேர்தலை நடாத்துவதாயின் வேட்பாளர்களை தேடிக்கொள்ளவும் அவரால் முடியாது. ராஜபக்ஷாக்களுக்கு சனாதிபதி தேர்தலுக்காக குடும்பத்திலிருந்து வேட்பாளரொருவரைத் தேடிக்கொள்ள இயலாதென்பதால் பொதுத் தேர்தலை முதலில் நடாத்தினால் நல்லதென ராஜபக்ஷாக்கள் நினைக்கிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தி போன்ற கட்சி ஊர்களில் எஞ்சியுள்ள வாக்குகளை சேகரித்துக்கொள்வது பற்றி சிந்திக்கிறது. குழுக்கள் மூன்றாகப் பிரிந்திருந்தாலும் ஒரே குழுவான இவர்களுக்கு ஜுலை மாதம் 22 ஆந் திகதிவரை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா அல்லது பொதுத் தேர்தல் நடைபெறுமா என சிந்தித்துக்கொண்டிருக்க நேரிடும். அதைப்போலவே பொதுவாக பாராளுமன்ற அமர்வு நடைபெறுகின்ற தினங்களில் காலை ஒன்பது மணி தொடக்கம் மாலை ஐந்து மணிவரை விவாதம் நடைபெறும்.  இந்த நேரத்தில் எமக்கு கிடைப்பதோ பத்து நிமிடங்கள் தான்.  அவர்களுக்கு ஏழு மணித்தியாலங்களும் ஐம்பது நிமிடங்களும் கிடைகின்றது.  அந்த மொத்த நேரத்திலும் எம்மை இலக்காகவைத்து தாக்குதல் நடாத்துகிறார்கள். ஒருசில தொலைக்காட்சி விவாதங்களில்  நான்கு அறிவிப்பாளர்களும்  ஓர் அரசியல்வாதியும் இருப்பார்கள். அந்த ஐவரும் எம்மைப்பற்றிக் கதைத்து  தாக்குவார்கள். அவர்கள் அனைவரும் இலங்கையில் ஒருபோதுமே இருந்திராத அரசியல் மன அழுத்தத்திற்கு இரையாகி உள்ளார்கள். 

இன்று ஹோமாகமவில் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் புதல்வியரைக் கண்டால் அவர்களின் மனஅழுத்தம் மென்மேலும் வேகமாக அதிகரிக்கும். நாங்கள் எதிர்கொண்டிருப்பது வெறுமனே அரசாங்கத்தை மாற்றுவது மாத்திரமல்ல. இலங்கை வரலாற்றில் பலம்பொருந்திய அரசியல், பொருளாதார, சமூக மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி வருகிறோம்.  அதனால் இதுவரை  நாட்டை ஆட்சிசெய்த குழுக்கள் இறுதிவரை அவர்களின் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். தமது அரசியல் பலத்தை பாதுகாத்துக்கொண்டாலும் லசந்த விக்கிரமதுங்கவை படுகொலைசெய்து மேலும் பல ஊடகவியலாளர்களை தாக்கினார்கள். தனது கணவனை இழந்த வேதனையைத் தாங்கிக்கொண்டிருக்கின்ற சந்தியா எக்னெலிகொடவிற்கும் நீதி கிடைக்கவேண்டுமல்லவா? பேனையை நெறிப்படுத்தி, தனது கருத்தியலை வெளிப்படுத்தியதால் அவர்கள் எவருமே படுகொலை செய்யப்படலாகாது. "சண்டே லீடர்" செய்தித்தாளில் பல பக்கங்களை லசந்த விக்கிரமதுங்க ரணிலுக்காகவே நிரப்பினார். தற்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். லசந்த விக்கிரமதுங்க பற்றிய விசாரணைகள் கிடையாது. இந்த நாட்டு மக்களின் நிதிசார் குற்றச்செயல்களை மேற்கொள்வதில் முக்கிய கட்டம் மத்தியவங்கி கொள்ளை மூலமாக மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் புரிந்த நிதிசார் கொள்ளைகள் பற்றி விசாரித்தறிந்து தண்டனை வழங்குவதாகக்கூறிய குழுமங்கள் தற்போது ரணில் விக்கிரமசிங்கவைப் போன்றே ஐக்கிய மக்கள் சக்தியை சூழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் தண்டனை பெறவேண்டிய இந்த குற்றச்செயல்களிலிருந்து பாதுகாப்புப்பெறுவதற்காக பல்வேறு தந்திரோபாயங்களை பிரயோகிக்கிறார்கள். பரம்பரையை மையமாகக்கொண்டு வருகைதந்த இந்த மோசடியான, ஊழல்மிக்க ஆட்சி பொதுமக்களுக்கு கைமாமாறுகின்ற கட்டத்திற்கு வந்துள்ளது.

 

அரசியலில் பிரவேசிக்க எதிர்பார்க்கின்ற இளைஞர்களுக்காக எமது ஆட்சியின்கீழ் புதிய கதவுகள் திறக்கப்படும். அவர்களின் தலைமுறைவழியில் வந்த அரசியல், சாதாரண மக்களின் பிள்ளைகளிடம் கைமாறுவதை தடுப்பதற்காக புரியக்கூடிய அனைத்துவிதமான சூழ்ச்சிகளையும் புரிகிறார்கள். மத்திய கொழும்பில் மைதானமொன்றை நிரப்பி அரிசி கொண்டுவந்திருக்கிறார்கள். இலங்கை வரலாற்றில் மிகஅதிகமான பணத்தொகையை இந்த தேர்தலுக்காக அவர்கள் பாய்ச்சுகிறார்கள். ஆனால் 2022 மே மாதம் 09 ஆந் திகதிக்கு முன்னர் இருந்த மக்களை ஏமாற்றக்கூடியதாக இருந்தபோதிலும் தற்போது இருப்பவர்கள் அனுபவங்கள் வாயிலாக கற்றுக்கொண்ட,  மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைக்கொண்ட அரசாங்கத்தைப்போலவே அறுபத்தொன்பது இலட்சம் வாக்குளால் நியமிக்கப்பட்ட சனாதிபதியொருவரை விரட்டியடித்த  மக்களாவர். ஈராக்கில் சதாம் ஹுசெயினை விரட்டியடிக்க அமெரிக்க இராணுவம் தரையிறங்கியது.  லிபியாவிலும் அப்படித்தான். எனினும் 69 இலட்சம் வாக்குகளைப்பெற்ற ஆட்சியாளனை ஒரு துண்டு கல்லைக்கூட கையில் எடுக்காமல் மக்கள் விரட்டியடித்தார்கள்.  எனவே அவர்கள் விளையாட முனைவது நாங்கள் அரசியல் புரிகின்ற புதிய மக்களுடனேயே. ரனில் விக்கிரமசிங்காக்கள், மகிந்த ராஜபக்ஷாக்கள், சஜித் பிரேமதாசாக்கள் பழைய மக்களுடனேயே அரசியல்புரிய எத்தனிக்கிறார்கள் நாங்கள் அரசியல் புரிவது 2022 மே மாதம் 09 ஆந் திகதிக்குப் பின்னர் மாறிய புதிய மக்களுடனேயே. அவர்களின் ஒரு பிரச்சார அலைவரிசைக்காக எமது பல்லாயிரக்கணக்கான பிரச்சார வாய்கள் இருக்கின்றன. நீங்கள் எங்கே சென்றாலும் அவர்களின் குறைகூறல்கள், சேறுபூசுதல்கள், திரிபுடுத்தல்களுக்கு எதிராக சரியானதை விளக்கிக்கூறுங்கள்.    


ரணிலின் தேர்தல்  பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்ல மூன்று  நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  ஒரு நிறுவனம் தயாரித்துள்ள பிரச்சாரத்தில் ரணிலைப் பற்றி நான்கில் ஒன்றைக் கூறுகையில் எம்மைப்பற்றி நான்கில் மூன்றைக் கூறுகிறார்கள். எம்மைப் பற்றித் தயாரிக்க கொடுத்திருப்பதும் எம்மவர் ஒருவரிடமே. எண்பத்தெட்டு, எண்பத்தொன்பது காலப்பகுதி பற்றி பயத்தை உருவாக்குவதற்காக ஒரு பிரச்சாரம் தயாரிக்கப்படுகின்றது.  இரண்டாவதில் நாங்களும் சிறிதுகாலம் அரசாங்கங்களில் இருந்ததாக கூற முயற்சி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவதில் இது பரீட்சித்துப்பார்க்க உகந்த தருணமல்ல எனக் கூற விளைகிறார்கள். பணத்தைப் பாய்ச்சி, அறிவித்தல்களை படைக்கின்ற, செய்தித்தாள்களை அச்சிடுகின்ற பிரச்சாரங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. எமது நாட்டு மக்களின் செல்வத்தைக் கொள்ளையடித்து மக்களை இந்த படுகுழிக்குள் இழுத்துப்போட்ட ஆட்சியாளர்கள் சம்பந்தமாக நியாயமான விசாரணைகளை மேற்கொண்டு தண்டனை வழங்குவதற்கான அவசியம் எமக்கு இருக்கின்றது.  இங்கு வருகை தந்திருக்கின்ற எவரும் தமது தனிப்பட்ட நோக்கங்களுக்காக  வந்தவர்கள் அல்ல.  இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இதைவிட சாதகமான வாழ்க்கையைக் கட்டியெழுப்புதல் பற்றிய பொதுவான நோக்கம் மாத்திரமே எம்மிடம் இருக்கின்றது. அந்த நோக்கத்தை வேறு எவராலும் காப்பியடிக்க முடியாது. பௌத்த இலக்கியத்தில் குறிப்பிடப்படுகின்ற வட்டுக்குருவிகளை வேட்டையாடுவதற்காக வேடன் விரித்த வலையிலிருந்து கூட்டாக விடுபட்டுச்செல்கின்ற தலைமைத்துவத்தை போதிசத்துவ வட்டுக்குருவி வழங்கியது. "பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன்" எனும் தொனிப்பொருளின்கீழ் இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே ஒன்றுசேர்ந்துள்ளார்கள். நாங்கள் அதற்காக திட்டங்களை வகுத்து மேடையில் பேசினாலும், அந்த செயற்பாங்கின் அதிகமான சுமையைத் தாங்குவது, முனைப்பாக இயங்குவது, மேடையின் முன்னால் குழுமியுள்ள நீங்கள் அனைவருமே.  அதனை வெற்றியின்பால் நெறிப்படுத்துவதற்கான ஆக்கத்தையும் ஊக்கத்தையும் உங்களுக்காக பிரார்த்திக்கிறோம். 

 

தேர்தல் வெற்றியென்பது இறுதியானதல்ல, நாட்டைக் கட்டியெழுப்புவதன் தொடக்கமாகும். அதன் முதன்மைப் பணி மக்களின் உணவவேளை வழங்கப்படுவதை உறுதிசெய்வதாகும். எமது நாட்டின் பாரியளவிலான அரிசியாலை உரிமையாளர்கள் ஒருசிலரின்   தனியுரிமைச் சந்தையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்கீழ் சிதைத்து நியாயமான விலையில் பாவனையாளர்களுக்கு அரிசியை வழங்கவும் கமக்காரனுக்கு நியாயமான விலையை வழங்கவும் பொறியமைப்பொன்றினை  வகுப்போம். மரக்கறி, பழங்கள் தொடர்பான சந்தையையும் அதைப்போலவே மீண்டும் அமைத்திட அறுவடைக்குப் பிந்திய விரயத்தை குறைத்திடுவோம். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின்கீழ் முதலில் பிரஜைகளுக்கு நியாமான விலையில் போசாக்கான உணவுவேளையொன்றை உறுதிசெய்வோம். நச்சுத்தன்மையற்ற உணவுவேளையொன்று வழங்கப்படுவதை உறுதிசெய்வோம். இரண்டாவதாக பிரஜைகளின் சுகாதாரத்தை பாதுகாப்பதற்கான குறுங்கால வழிமுறைகளைக் கடைப்பிடிப்போம். பரிசோதனை வசதிகள், ஔடதங்களை போதியளவில் வழங்குதல் என்பவற்றை ஓரிரு மாதங்களில் உறுதிசெய்வோம். பிள்ளைகளின் கல்விக்கு மூன்றாவது அவசரத் தேவையென்றவகையில் முன்னுரிமை வழங்குவோம்.  தான் படுகின்ற துன்பத்தை தனது பிள்ளைக்கு கொடுக்காதிருக்கும் நோக்கத்துடன் பெற்றோர்கள் கல்விக்காக பாரிய அர்ப்பணிப்பினைச்செய்து வருகிறார்கள். இன்றளவில் ஒட்டமொத்த பாடசாலை முறைமையுமே சீரழிந்துள்ள நிலைமையை மாற்றியமைத்து மீண்டும் அதுபற்றிய நம்பிக்கையை உருவாக்கிடுவோம்.   கல்வியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி அனைத்து தொழில்களுக்கும் பொருத்தமான கல்வியை வழங்குவதற்கான நீண்டகால திட்டங்களை அமுலாக்குவோம். அதற்கான சமூக மனோபாவ மாற்றத்தையும் நாங்கள் ஏற்படுத்துவோம்.  தற்போது வீட்டுக்குச் சுமையாக மாறியுள்ள  பிள்ளையின் கல்வியை அதிலிருந்து விடுவித்து அரசாங்கத்தின் பொறுப்பாக மாற்றிடுவோம். அறிவினாலும் திறன்களாலும் நிரம்பிய பிரஜைகளை உருவாக்குகின்ற கல்வியே எமக்குத் தேவை.  உலகத்துடன் போட்டியிடக்கூடிய பிள்ளைகளை உருவாக்குகின்ற கல்வியே எமக்குத்தேவை. தேர்தல் காலத்தில் படிவங்களை பூர்த்திசெய்கின்ற, சாராய கிளாசிற்கு அடிமைப்படுகின்ற, நாமலின் பின்னால் செல்கின்ற பிள்ளைகளே அவர்களுக்குத் தேவை. உலகின் புதிய அறிவினை உறிஞ்சியெடுத்து முன்நோக்கி நகர்கின்ற சமூக ஒழுக்கத்தைக்கொண்ட பிள்ளைகளை உருவாக்குகின்ற கல்வியையே நாங்கள் உருவாக்குவோம்.  அதைப்போலவே ஒழுக்கமான சட்டத்தை மதிக்கின்ற சமூகத்தை உருவாக்கிட இதுவரை பயணித்த பாதையிலிருந்து எதிர்காலத்தில் நாட்டைக் கட்டியெழுப்புகின்ற மாற்றத்தை ஏற்படுத்தவல்ல அரசாங்கமொன்றை அதிகாரத்திற்கு கொண்டுவரவேண்டும். அதன் பின்னர் பெண்களுக்கும் மடியில் தவழ்கின்ற பிள்ளைக்கும் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகின்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான மாற்றத்திற்கான வெற்றிக்காக  துணிச்சலுடன் வீறுநடை போடுமாறு  அழைப்பு விடுகிறோம்.

No comments

Powered by Blogger.