Header Ads



வீட்டு கூரையில் வந்து விழுந்த 50 கிலோ பனிக்கட்டி - இலங்கை வரலாற்றில் இதுவே முதல் தடவை (படங்கள்)


ஹாலிஎல, மெதகம பகுதியில் உள்ள வீடொன்றின் கூரை மீது நேற்று (12) சுமார் 5 கிலோ எடையுள்ள பனிக்கட்டி ஒன்று வீழ்ந்துள்ளது.


இது குறித்து பிரதேசவாசிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.


மேற்கூரையில் விழுந்த பனிக்கட்டி உருகி தரையில் விழுந்து உருகுவதற்கு பல மணி நேரம் சென்றதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.


ஹாலிஎல, மெதகம பகுதியில் உள்ள வீடொன்றின் கூரை மீது சுமார் 5 கிலோ எடையுள்ள பனிக்கட்டி ஒன்று வீழ்ந்துள்ளது.


இது குறித்து பிரதேசவாசிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.


வானில் இருந்து இவ்வளவு பெரிய பனிக்கட்டி வீழ்ந்தது வரலாற்றில் முதல் தடவை என பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் உதய குமார தெரிவித்தார்.


எவ்வாறாயினும், வறட்சியான காலநிலையின் போது சிறிய பனிக்கட்டிகள் விழுவதாக கூறப்படுகின்ற போதிலும், தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இவ்வளவு பெரிய பனிக்கட்டி விழுந்தது இதுவே முதல் முறை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. ஐந்து கிலோவா ஐம்பது கிலோவா என்று முதலில் நீங்க ஒரு முடிவுக்கு வாங்க.

    ReplyDelete

Powered by Blogger.