Header Ads



5 மணித்தியால CID விசாரணையின் பின், பின்வழியால் வெளியேறிய மைத்திரி


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (25) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது தனது வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களை தமக்கு தெரியும் என மைத்திரிபால சிறிசேன கண்டியில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.


குறித்த அறிக்கை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்தார்.


இதன்படி, வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 10.30 மணி அளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.


இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் மைத்திரிபால சிறிசேன பொய்யான தகவல்களை வெளியிட்டதாக பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அது தொடர்பில் தெரிவிக்கும் சட்டப் பொறுப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.