ஜனாதிபதி இன்று கூறிய 4 முக்கிய விடயங்கள்
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதியில் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்குக் குறைவாக இருந்த பயன்படுத்தக்கூடிய அந்நியச் செலாவணி கையிருப்பு தற்போது 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை விட அதிகமாக அதிகரித்துள்ளதாகவும் தனியார் மோட்டார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதித் தடைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
1977ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக 2023ஆம் ஆண்டில் கொடுப்பனவு இருப்பு மற்றும் நடப்புக் கணக்கு உபரியை அடைய முடிந்ததாகவும் இதன் காரணமாக கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 363 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்று சுமார் 308 ரூபாவாக வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
'உறுமய' வேலைத்திட்டத்தின் கீழ் 20 இலட்சம் குடும்பங்களுக்கு நிரந்தர காணி உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய தரப்பினரை பொருளாதார பிரச்சினைகளிலிருந்து மீட்பதற்கான கொடுப்பனவுகள் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டு, 24 இலட்சம் பேர் 'அஸ்வெசும' கொடுப்பனவைப் பெறுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
Post a Comment