பிடிவாதத்துடன் நோன்பு பிடித்த, மாணவி உத்ரா ஜானகி
பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் காலை ஒன்பது மணி வரை தூங்கும் பழக்கமுள்ள உத்ரா, மறுநாள் அதிகாலை 4.45மணிக்கு அலாரம் வைக்கலாமே எழுந்து லைட் போட்டதுடன் நான் நோன்பு வைக்க போகிறேன் என்று கூறி இரண்டு டம்ளர் தண்ணீர் மட்டும் அருந்தி விட்டு படுத்துக்கொண்டாள்..
தனது மகள் விளையாட்டாக சொல்கிறார் என்று நினைத்துக் கொண்ட பெற்றோர் காலையில் உத்ரா எழும்பிய பின் டிபன் சாப்பிட அழைக்க அவர் நோன்பு வைத்ததில் உறுதியாக இருந்தார்.
அதிகாலை உணவு உண்ணாமல் நோன்பிருக்க சிரமமாக இருக்கும் என்றும், பசியால் மயக்கம் வரும் என்று பெற்றோர் கூறிய போது தனக்கு சோர்வாக உணர்ந்தால் சாப்பிட வருவதாக கூறி நோன்பை தொடர்ந்த உத்ரா, மாலை ஆறரை மணி வரை அசாதாரணமாக தனது முதல் நோன்பை பூர்த்தி செய்ய,
பெற்றோர் வேறு வழியின்றி அருகில் உள்ள மசூதியின் மக்ரிப் பாங்கொலி கேட்கும் நேரத்தில் மகளுக்கு பேரீச்சம் பழமும் எலுமிச்சை சாறும் வழங்கியதுடன், தனது ஒன்பது வயது மகளின் ஆத்மபலத்தை குறித்து ஒரு பதிவும் செய்துள்ளார்...
-Azheem-
இந்தப் பிள்ளைக்கு யா அல்லாஹ் ஹிதாயத்தை நஸிபாக்குவாயாக. இது போன்ற பல ஆயிரம் குழந்தைகளுக்கு நல்ல வழியைத் திறந்து விடுவாயாக. அதன்மூலம் உலகில் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.
ReplyDelete