40 வீதமான பெண்கள் ஆபத்தில் உள்ளனர்
சானிட்டரி நாப்கின்களின் விலை அதிகரிப்பு காரணமாக குறிப்பிட்ட நாட்களில் மாணவிகளின் பாடசாலை வருகையும் குறைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
15 முதல் 47 வயதுக்குட்பட்ட பெண்களில் 40 சதவீதம் பேர் சானிட்டரி நாப்கின் யன்படுத்துவதை நிறுத்தியுள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இதற்கு முக்கியக் காரணம் சானிட்டரி நாப்கின்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருப்பதே என ஆய்வில் தெரியவந்துள்ளது.
தற்போது இறக்குமதி செய்யப்படும் சானிட்டரி நாப்கின்களுக்கு 51 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு சானிட்டரி நாப்கின்களின் விலை 90% மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை 30% உயர்த்தப்பட்டுள்ளது.
சானிட்டரி நாப்கின்களின் விலை உயர்வால் தங்கள் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தாய்மார்கள் தெரிவித்தனர்.
இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்தாவிடின் பெண்கள் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Post a Comment