Header Ads



மர்ஹும் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் 4ஆவது நினைவு தினமும் நூல் அறிமுக நிகழ்வும்


இலங்கை ஒலிபரப்பாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், சிரேஷ்ட ஒலி-ஒளிபரப்பாளர் மர்ஹூம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் நான்காவது வருட நினைவு தின நிகழ்வும், 'ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஒரு சகாப்தம்' எனும் நூல் அறிமுக நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) மாளிகைக்காடு, பாபா ரோயலி வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

 

இலங்கை ஒலிபரப்பாளர் ஒன்றியத்தின் தலைவரும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளருமான சிரேஷ்ட ஒலி - ஒளிபரப்பாளர் யூ.எல்.யாகூப் தலைமையில், சர்வதேச புகழ் ஒலிபரப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் முன்னிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் முதன்மை அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

 

மேலும், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் ஷஹிலா இஸ்ஸடீன், கல்முனை பொலிஸ் நிலைய தலைமையகப் பொறுப்பதிகாரி எம்.றம்ஸீன் பக்கீர், தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் மற்றும் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை அதிபர் எஸ்.கலையரசன் உட்பட முன்னாள் உள்ளூராட்சிமன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள், மர்ஹூம் ஜிப்ரியின் குடும்பத்தினர், கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.